தமிழர் பண்பாடு

உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், மூலம் அறிவியலை வெளிப்படுத்துகிறது மற்றும் பழந்தமிழரின் தொழில்நுட்பம் இன்றைைய தொழில்நுட்ப வல்லுநர்களை அதிசயிக்கச் செய்கிறது. தமிழர் பண்பாடு தமிழ்  மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, , கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் மூலமாகவும் நம் சடங்குகளின் மூலமாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.

“தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாடு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.”

பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது ‘அகக்கூறு ‘ பின்னது ‘புறக்கூறு’. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் உள்ளது.

பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறுப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்ய முடியும். தமிழர் தங்களது பெருமுயற்சியினால் கிட்டும் பொருள்களையே ஏற்று வாழ்ந்தனர்.பிறரிடம் யாசிப்பதை இழிவாகக் கருதினர்.அதே சமயத்தில் உறுப்பறைகள்(ஊனமுற்றோர்), பார்வையற்றோர்,நோயாளிகள், முதியோர்கள் முதலியோர் தம்மிடம் வந்து யாசித்தால் அவர்களுக்கு உதவுதலை பெரிதாகக் கருதினர்.நிலையான தொழில்களாலும் கலையாத உறவின்முறைகளாலும் பழந்தமிழர்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர்.அவர்கள் கற்றோரை பெரிதாகப் போற்றினர்.அக்கால தமிழ் மன்னர்கள் கற்றோரை மதித்து வாழ்ந்தனர்.அதனால் தமிழ் மக்கள் பார் போற்றும் நல்வாழ்வு வாழ்ந்தனர்.தமிழர்கள் தம் சந்ததியினர் நல்வாழ்வு வாழ பல அறநூல்களை  இயற்றினர்.ஆன்மிகத்துடன் அறிவியலைப் புகுத்தி,மாபெரும் பண்பாட்டை உருவாக்கிச் சென்றுள்ளனர்.

You May Also Like

About the Author: IniyathuAdmin