பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி

இந்த பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கின்றன.

தேவையான பொருட்கள் :

  • புளிக்காத தயிர் – 2 கப்,
  • பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,
  • முந்திரி – 8,
  • மாதுளை முத்துக்கள் – கால் கப்,
  • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
  • உப்பு – சிறிது.

செய்முறை:

  • தயிரை நன்கு வடிகட்டுங்கள்.
  • முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.
  • சில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.
  • சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி ரெடி.

You May Also Like

About the Author: IniyathuAdmin