இலங்கையின் அழகு

வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளைக் கவர்ந்த ஒரு நாடாகும்.  இலங்கை 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும். இந்தியாவின் தென்முனைப்பகுதியில் இது அமைந்துள்ளது.  இதன் சிறப்பான அமைவிடமானது பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் இலங்கையை மிகவும் பிரபலமான ஒரு இடமாக ஆக்கியுள்ளது. வளைகுடாப் பிராந்தியத்தின் எல்லாப் பிரதான நகரங்களில் இருந்தும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் இலங்கைக்கான விமானப் பயண நேரம் மூன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தகப் பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது.

     நாட்டின் தென்பகுதி பொன்நிறமான கடற்கரையையும், மத்திய பகுதி பனிபடர்ந்த மலைகளையும் கொண்டுள்ளது. இவை தவிர சிதைந்து போன கலாசார முக்கோணங்கள், கன்னிமலைக்காடுகள், பசுமையான புல்வெளிகளும், வயல்வெளிகளும் இலங்கையின் அழகுக்கும், எழிலுக்கும் மெருகு சேர்ப்பதோடு இந்த மிதமிஞ்சிய எழில் கொஞ்சும் இயற்கை அழகுகள் காரணமாக உண்மையிலேயே ஒரு சொர்க்கபுரித்தீவாக இலங்கை உலகில் இடம்பிடித்துள்ளது.

     ஓய்வுக்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்றவர்களுக்கு இலங்கை மக்களின் விருந்தோம்பல் உண்டையிலேயே அவர்களின் பயணத்தைப் பெறுமதிமிக்கதாக்குகின்றது.வர்த்தகப் பயணிகளுக்கு செறிவான கைத்தொழில் பிரிவுகளும், சிறிய கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஆற்றல் மிக்க வர்த்தகத் தொடர்புடன் கூடிய கல்வியறிவு மிக்க மக்களும் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாகும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin