இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழில்

  • சுற்றுலாத் துறை உலகின் குறைந்தளவு செலவில் அதிக இலாபம் தரும் துறையாக உலகம் பூராவும் உணரப்பட்டுள்ளது. சுற்றுலா கைத்தொழில் நடைமுறையில் உலகின் பாரிய அபிவிருத்தியடைந்து வரும் நிலை காணப்படும் கைத்தொழிலாகும். இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவமுடைய இடங்கள், இயற்கை அழகு சார்ந்த இடங்கள், சரணாலயங்கள் எனப் பல்வகை அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்ற ஒரு பிரதேசமாகும்.
  • இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மிக சிறிய தீவாகிய இலங்கையில் பல்வேறு புவியியல் வேறுபாடுகள், பல்வேறு காலநிலை, குறுக்கியகாலத்தினுள் அடையக்கூடிய பல்வேறு இயற்கையானதும், மானிட அமைப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளதும் சுற்றுலாத்துறையை கவருவதற்கு ஏதுவாகின.

1)இலங்கையின் பிரதான சுற்றுலா வலயங்கள்
• கொழும்பு – நகரம்
• கொழும்பு மாநகரம்
• தெற்கு கரை
• கிழக்கு கரை
• மத்திய மலைநாடு
• வரலாற்று நகரம்
• வட பிரதேசம்

2)இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்

தரைத்தோற்ற வேறுபாடுகள் – இலங்கையானது மத்திய மலைநாடு, அண்சமவெளி, கரையோரச்சமவெளி என பிரதானமாக மூன்று வேறுபட்ட தரைத்தோற்ற வலயங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இவ்மூன்று வேறுபட்ட பிரதேசங்களும் பல்வேறு துணை அம்சங்களை தமக்கே உரியனவாகக் கொண்டு காணப்படுகின்றன. இந்த நிலைமையினை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மலைநாட்டுப் பகுதிகளில் மலைத்தொடர்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள், கரையோர கடற்கரைகள் பெரிதும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.

• வேறுபட்ட காலநிலை – இலங்கையானது ஈரக்காலநிலை, வரண்டகாலநிலை என இரண்டு பிரதான வேறுபட்ட காலநிலைத் தன்மைகளை கொண்டு காணப்படுகின்றமையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு காரணமாகியது. ஈரக்காலநிலைப் பகுதியில் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காணப்படுவதுடன், வரண்ட காலநிலைப் பிரதேசங்களில் பருவத்தில் மாத்திரம் குறைந்த மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. அத்துடன் மலைநாட்டுப் பகுதியில் கடுமையான குளிரும்,  கரையோரப் பிரதேசத்தில் அதிக வெப்பமும் நிலவுகின்றது.

• இலங்கை தீவாக உள்ளமை – இலங்கை தீவாக உள்ளமையால் சுற்றிவர கடல் காணப்படுகின்றது. கடற்கரையைப் பொறுத்தவரையில் கரையோர மணல்,  சூரிய வெளிச்சம் போன்ற அம்சங்கள் பெரிதும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் கடற்கரை சார்ந்த பிரதேசங்களையே அதிகம் விரும்புகின்றனர்.

இயற்கை அழகு – இலங்கையில் பல்வேறு இடங்களில் காணப்படும் நீர்வீழ்ச்சி, குன்றுகள்,  தாவரங்கள் போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை அழகினை ரசிப்பதற்கும் பெருமளவிலான மக்கள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

• தலாவருமானம் வெளிநாடுகளில் உயர்வு – அபிவிருத்தியடைந்த நாடுகளில் மக்களின் பொழுது போக்கிற்கு ஏதுவாய் அமைந்தகாரணி தலா தேசிய வருமானம் உயர் மட்டத்தில் நிலவுவதாகும். வருடாந்த ஓய்வு விடுமுறையை பெற்றுக் கொள்ள அமைத்து ஊழியர்களும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். பாடுதல், ரசித்தல்,  விடுமுறை காலங்களில் தமது வேலையிடத்தில் வெளியேறி விடுமுறையை கழிப்பதற்கு சம்பளத்துடன் விடுமுறை கிடைப்பது காரணமாகும்.

செலவு குறைவு – வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் பல்வேறு நிலைமை காணப்படுகின்றமையும் இவ் ஒவ்வொரு நிலைமையையும் பிரதேசத்தினுள் குறைந்த தூரத்தில் அடையக்கூடியதாக இருப்பதனால் குறைந்த செலவில் விடுமுறையைக் கழிக்கமுடியும். அத்துடன் தமது நாட்டில் செலவு செய்வதைவிட குறைந்த செலவில் இலங்கையில் விடுமுறையைக் கழிக்கக்கூடியளவிற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

• அரச ஆதரவு – சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காக ஆரம்பத்தில்  சுற்றுலா வேலைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டமை எதிர்க்காலத்திற்குக் காலாகியது. 1966 இல் சுற்றுலா சட்டத்தின் ஊடாக இலங்கை சுற்றுலா சபை அமைக்கப்பட்டமை. 1968 – 1978 ற்கு இடையிலான 10 ஆண்டுக்கால முன்னேற்ற அறிக்கை திட்டத்தை வடிவமைத்தது. இதற்கேற்ப பிரதான சுற்றுலா மத்திய நிலையம் ஐந்தினை பெயரிடல், 1993 இல் இலங்கை சுற்றுலா ஹோட்டல் பாடசாலையை அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அரசு ஆதரவு வழங்கி வருகின்றது.

• விளம்பரங்கள் – இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களும் தமது சேவைகளை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு வகையான விளம்பர உத்திகளையும் கையாளுவதுடன், இலகுவாக சேவைகளைப் பெறக்கூடிய வழிவகைகளையும் செய்துள்ளன.

You May Also Like

About the Author: IniyathuAdmin