சுவாமி விவேகானந்தரின் 155வது ஜனன தின நிகழ்வுகள்

உலகளாவியரீதியில் ஜீவசேவையாற்றிவரும் ஸ்ரீ ராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் இப் பூவுலகில் அவதரித்து இன்றுடன் 155 வருடங்களாகின்றன.

சுவாமிகளினுடைய 155வது ஜனன தின சிறப்பு நிகழ்வுகள் அன்று 21ம் திகதி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழக தலைவர் திரு.எஸ்.நேசராசா அவர்களின் தலைமையில் கழகத்தின் தலைமைக் காரியாலயமான கரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினுடைய சிரேஸ்ர உறுப்பினர்கள், ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.கி.ஜெயசிறில், காரைதீவு இ.கி.மி பெண்கள் பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மணிமாறன் மற்றும் கண்ணகி சனசமூகத்தின் செயலாளர் திரு. கு.ஜெயராஜி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் காரைதீவு இ.கி.மி ஆண்கள் பாடசாலை மற்றும் இ.கி.மி பெண்கள் வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஆலோசனையின் கீழ் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: IniyathuAdmin