இந்த சிறிய மிளகிற்கு ஆன்மிகத்தில் இத்தனை சக்தியா?

மிளகினை பொதுவாக நாம் சமைப்பதற்காக பயன்படுத்துவோம். இதில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பதையும் நாம் அறிவோம். பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட போய் உண்ணலாம் என்பது நம் முன்னோர்களின் பழமொழி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இந்த மிளகை நாம் வைத்துக் கொள்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலில் இருந்தும், கண்ணுக்குத் தெரியாத சில கெட்ட சக்திகளிடம் இருந்தும் கூட தப்பித்துக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

சிறிய வயது பெண் குழந்தைகள், வயதிற்கு வந்த பெண்கள் நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வர வேண்டிய சூழ்நிலையை இந்த வளர்ந்து வரும் நவீன காலத்தில் தடுக்க முடியாது. ஆனால் நேரம் காலம் இல்லாமல் கன்னிப் பெண்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், ஆண் குழந்தைகளாக இருந்தாலும், நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வருவது அவ்வளவு நல்லதல்ல என்று நம் தாத்தா பாட்டி நம்மிடம் கூறியிருப்பார்கள். ஆனால் இன்று, சூழ்நிலை அதற்கு தகுந்தார்போல் இல்லை. எதிர்மறை சக்தியானது குழந்தைகளிடமும், குறிப்பாக பெண் குழந்தைகளிடம் விரைவாகவும், அதிகமாகவும் நெருங்கும் என்பது நமது நம்பிக்கை. அது உண்மையும் கூட.

அப்படி எதிர்மறை ஆற்றலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சோர்வாகவும் எந்த ஒரு செயலின் மீதும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பார்கள். அதைத்தான் நம் வழக்கத்தில் காத்து கருப்பு பிடித்துவிட்டது, திருஸ்டி பட்டுவிட்டது அல்லது எங்கேயோ எதையோ பார்த்து பயந்து உள்ளார்கள் என்று நாம் கூறுவோம்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து நம் குழந்தைகளை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் மிகவும் சுலபமான வழி உள்ளது. ஒரு 15 லிருந்து 20 மிளகை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி அவர்களது பையில் வைத்து விடுங்கள். அந்த மிளகு ஒன்றே போதும் அவர்களுக்கு துணையாக இருக்க. எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாது என்பது நம்பத்தகுந்த உண்மை.

உங்களது வீட்டில் கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்க எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் இரண்டு துண்டுகளிலும் மிளகினை பதித்து, உங்கள் வாசல் படியின் இரண்டு பக்கத்திலும் வைத்துவிடுங்கள். கெட்ட எண்ணம் உள்ளவர்கள் கூட உங்கள் வீட்டின் உள்ளே நுழைய முடியாது.

ஏதாவது ஒரு முக்கியமான நல்ல காரியம் வெற்றி அடைய வேண்டுமென்றால் ஒரு நான்கைந்து மிளகினை எடுத்து நான்கு திசைகளிலும் போட்டுவிட்டு பின்பு அந்த காரியத்தை செயல்படுத்த சொல்லுங்கள் நீங்கள் கைகளில் எடுத்த அந்த காரியமானது வெற்றி அடையும். திடீரென்று உங்கள் மனதில் கெட்ட எண்ணங்களோ அல்லது எதிர்மறையான ஆற்றல்களோ உண்டாவது போல நீங்கள் உணர்ந்தால், ஒரு நான்கு மிளகினை எடுத்து உங்கள் பல் இடிக்கில் கடித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாயிலிருந்து நீங்கள் விழுங்கும் அந்த மிளகு சாறு கலந்த உமிழ்நீர் உங்கள் தொண்டையில் இறங்கும் அந்த சமயமே உங்கள் மனது லேசாகி விடும். ஒருமுறை முயற்சி செய்து தான் பாருங்கள். மிளகின் சக்தியை நீங்கள் உணர்வீர்கள்.

 

 

You May Also Like

About the Author: IniyathuAdmin