நாவூற வைக்கும் நண்டு சமையல்!

 

மிளகு நண்டு

*  நண்டு ஆம்லெட்

*  சில்லி நண்டு

*  நண்டு ரசம்

*  நண்டு சகியூடி (கோவா ஸ்டைல்)

*  க்ராப் டெவில்டு எக்ஸ்

*  நண்டு லாலிபாப்

*  நண்டு ஃப்ரைடு ரைஸ்

*  நண்டு கேரோல்

*  நண்டு ரங்கூன்

தேவையானவை:
நண்டு – ஒரு கிலோ
முழு மிளகு – 3 டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் அரைத்த விழுது – 2 கப்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை

மிளகு, மல்லி (தனியா), சோம்பை தனித்தனியாக பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். பிறகு நன்றாக ஆறவிட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் பொடித்த மசாலாத்தூள், மஞ்சள்தூள், சுத்தம் செய்த நண்டு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி,  சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 10, 15 நிமிடங்கள் வரை மூடிபோட்டு வேகவிடவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயை மற்றொரு வாணலியில் சேர்த்து, சூடாக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். அவித்த மிளகு, நண்டை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடவும். சாதம், இட்லி, தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin