பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் இலங்கையில் பிரபலமாகி இருக்கும் ஒரு வகையான கிராமப்புற நாடகமாகும். இந் நாட்டு நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தெடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டலை அறிமுகப்டுத்தலாகும். பொம்மலாட்டம் என்பதை ஆங்கிலத்தில் ‘Puppet’ அழைக்கப்படுவதோடு சிங்கள மொழியில் ‘ரூகட’     என அழைக்கப்படும். சிங்கள மொழியின் படி ரூகட என்பது அறை உருவம் என்று விளங்குவதோடு உருவத்தின் மீதி அறைக்கான பங்களிப்பை பொம்மலாட்ட கலைஞனால் வழங்கப்படும்.

வரலாறு

பொம்மலாட்ட கலை ஒரு நாட்டுப்புற கலையாக ஆரம்ப காலத்தில் இருந்தே வந்திருப்பமைக்கான சாட்சிகள் பாரம்பரிய கதைகள், வரலாற்று கதைகள் மற்றும் பிற இலக்கிய கதைகளால் காணலாம். ஆயினும் இது ஒரு நாடக கலையாக பிரபல்யம் பெற்றிருப்பது சுமார் இதற்கு 300 வருடங்களுக்கு முனனரேவென விசுவாசிக்கப்படுகின்றது. இந்திய பொம்மலாட்ட நாடகத்தின் பாதிப்பு காரணமாக இந் நாட்டுக்கு கிடைத்திருப்பதோடு ‘ நாடகம’ எனும் நாடக கலைக்கு பின்னர் பிரபல்யம் அடைந்திருப்பதக அறிஞர்கள் கருதுகின்றனர். பின்னர் சீனா, மலேஸியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளின் பொம்மலாட்டம் சார் பாதிப்புகளும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஜர்மனி, செகொச்லாவெக்கியா, றச்சியா போன்ற நாடுகளால் இந் நாட்டு பொம்மலாட்ட கலைக்கு மாதிரிகளை பெற்றிருப்பினும் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென் இந்திய குறிகளுடன் இலங்கைக்கே தனிப்பட்ட முறையில் இன்னும் நடைப்பெற்று வருவதை காணலாம். சராசரி மனித உடலளவுக்கு நெறுங்கியதாக பொம்மைகளை நிர்மாணிப்பதில் இலங்கை புகழ் பெற்றுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை அம்பலான்கொடை மற்றும் பலபிட்டியா பிரதேசங்களில் இன்றும் பரலவாக காணக் கிடைப்பதோடு இப் பிரதேசங்களின் முன்னோடியான பொம்மலாட்ட வித்துவனாக கந்தெகொட பிரதேசத்தில் வாழ்ந்து வந்த திரு. பொடிசிரினா கலைஞரை கருதப்படும். இவர்களது பிற்காலத்து சந்ததியினர் சார்ந்த பல குடும்பங்கள் தற்போதும் இப் பாரம்பரிய பொம்மலாட்ட கலையை ஆடி வருகின்றனர். இக் குடும்பங்களை சார்ந்த உறவினர்கள் இலங்கையில் பல காகங்களில் குடயேறிய காரணமாக தற்போது கொழும்பு, கம்பஹ மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களிலும் இப் பொம்மலாட்ட கலையில் ஈடுபட்டிருப்போரை கணலாம். இவர்களின் பொம்மலாட்ட நாடகங்களில் ஆரம்ப காலத்து அம்பலான்கொடை பொம்மலாட்ட நாடகங்களில் காணக்கிடைத்த பாரம்பரிய அடையாளங்கள் அவ்வாறே உட்பட்டுள்ளது.

இந் நாட்டில் பாரம்பரியமற்ற பொம்மலாட்ட கலை இருவதாம் நூற்றாண்டு இறுதியில் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய, அமேரிக்க நாடுகளின் பதிப்பினால் ஆரம்பிப்பதோடு பல்கலைக்கழக அறிஞர்களின் ஒத்துழைப்பும் பெற்றதன் காரணமாக அதிகமானோரின் கவனத்தை ஈர்த்தெடுத்தது. பேராசிரியர் ஜயதேவ திலகசிரி அவர்கள் இது தொடர்பாக முன்னோடியான பணியை புரிந்துள்ளார். இலங்கையின் பல பிரதேசங்களில் இருந்து இளை பொம்மலாட்ட நாடக குழுகள் உருவாகி புத்தாக்கங்களுடன் மேடையேறுவதும் இக் காலத்திலேயே நிகழ்ந்தது. தற்போது இவ் இரு பாரம்பரியங்களை கொண்ட கலைஞர்களும் பொம்மலாட்ட நாடக கலையில் ஈடுபட்டிருப்பதை கணலாம்.

பொம்மை வகைகள் மற்றும் நிர்மாணிப்பு

இலங்கையில் பல வகையான பொம்மைகள் காணலாம். இதனை உற்பத்தி செய்கின்ற பொருள் மற்றும் பொம்மையை இயக்குகின்ற முறைக்கமைய பொம்மைகளை வகைப்படுத்தப்படும். நூல் பொம்மை, கோள் பொம்மை, நிழற் பொம்மை, கைபொம்மை, விரல் பொம்மை என்றும் தோற்றத்தின் படி இருகேண, முக்கோண படிவத்தில் நிர்மாணிக்கப்படும். பொம்மைகளின் படைப்பாளர்களின் திறமைக்கேற்றப்படி பொம்மை வகைகளை நிர்மாணிக்கின்ற போது அதில் ஒரு நிலையான தரத்தை காணலாம்.

பாரம்பரியத்திற்கு அமைவாக மர பொம்மைகளை நிர்மாணிக்கின்ற போது ‘கந்துரு’ அல்லது மென்பாலை தரத்தொன்றை தேர்ந்தெடுக்கப்படுவதோடு ஒரு வகையான வழிப்பாட்டு  முறைக்கு பின்னர் மரத்தை வெட்டி தேவையான பாகங்களை வரட்டடிக்க வைத்து பதப்படுத்தி தேவையான உருவத்தை சிதைத்தெடுக்கப்படும். ம்மனித உருவங்களை சிதைக்கின்ற போது சராசரி உடல் அளவை உபயோகித்துக் கொள்வதோடு இன்னும் இரு வகையான கலைகளான சிற்பக் கலை மற்றும் ‘பலி’ எனும் உருவக் கலையின் அளவு முறைகளும் இதன் போது உபயோகிக்கப்படும். உடல் உறுப்புகளின் அசையக்கூடிய இடங்களை பெரும்பாலும் மாதிரிக்கமைவாகவே நிர்மாணித்து அவற்றிற்கு துணி மணிகளை அணியவைத்து இயக்கும் பலகைகளில் பொருத்திக்கொள்ளப்படும். ஒவ்வொரு பாத்திரங்களின் தராதரம், தகமைக்கு அமைய அந்தந்த கலைஞனால் தொடர்புப்பட்ட பொம்மையை நடிக்க வைக்கின்ற போது பொம்மலாட்ட கலையின் ஒப்பனை, ஒலி அமைப்பு, உரை, இசை, மேடை அலங்காரம் எனும் மேலும் பல துறைகள் ஒன்றிணைவதை காணலம்.

இந் நாட்டின் அண்மை காலத்து பொம்மலாட்ட நாடக கலையை கவனத்திற்கு கொண்டு பார்க்கின்ற போது தென் இந்தியாவில் இருந்து பெறப்பட்டு பின்னர் இலங்கை  கலைஞர்கள் வசம் வளர்ந்து முன்னேற்றம் அடைந்து வெளிநாட்டவ அடையாளங்களையும் உட்பட்டதாக நிலவி வந்து தற்போது மேற்குத்தேய பொம்மலாட்ட நாடக கலையின் பாதிப்புகளுடன் முன்போகிக்  கொண்டுள்ளது. ஒரு சிறுவன் முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு கலை துறையாகவும் ஒரு உள்நாட்டு கலை துறையாகவும் எதிர்கால சந்ததியினருக்கு பொம்மலாட்ட நாடக கலையை பாதுகாத்து வழங்குவது மிக முக்கியமான விடையமாகும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin