ஒரு கருத்து நிறைந்த குட்டி கதை

  • ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் தன் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் (தாத்தாவின் அப்பா) கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று, கைக்கடிகார கடையில், நான் இதனை விற்க போகிறேன், இதற்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டுப்பார்” என்றார்.
அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 300 ரூபாய் மட்டுமே தரமுடியும் என்கின்றனர், என்றான்.
தந்தை, பழங்கால பொருட்கள் (Antique) விற்கும் கடைக்கு போய் கேட்டுப்பார், என்றார்.
அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், இதற்கு 5,000 ரூபாய் தரமுடியும் என்கின்றனர், என்றான்.
தந்தை, இதனை அருங்காட்சியகம் (Museum) கொண்டுசென்று விலையை கேட்டுப்பார், என்றார்.
அவன் போய் கேட்டுவிட்டு தந்தையிடம், நான் அங்கு சென்று கேட்ட போது, அவர்கள் அதனை பரிசோதனைக்கு உட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி 5,00,000 ரூபாய் என்கின்றனர், என்றான்.
தந்தை மகனை பார்த்து, “மகனே! சரியான இடம் தான், உன் அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.
உன்னுடைய மரியாதையை திறனை அறிந்தவனே உன்னை கண்ணியமாக நடத்துவான். உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே. இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.” என்றார்.

You May Also Like

About the Author: IniyathuAdmin