வாழ்க்கை.

அப்பா பாசமாக இருந்தால் அனாதை இல்லங்கள் இருக்காது. மகன் பாசமாக இருந்தால் சமுதாயத்தில் முதியோர் இல்லங்கள் இருக்காது. மனைவி அமைதியாக இருந்தால் ஆண்களுக்கு குறையே இருக்காது.

சிரித்துக் கொண்டே சொல்லும் உண்மைகளை விட அழுதுகொண்டே சொல்லும் பொய்களே அதிகம் நம்பப்படுகிறது. பிறக்கும்போது ஏழையாய் பிறப்பது உன் தவறில்லை. இறக்கும்போது ஏழையாய் இறப்பதுதான் உன் தவறு. விக்கலுக்குப் பயந்தால் வயிறு நிறையாது.சிக்கலுக்கு பயந்தால் வாழ்வு இருக்காது.

ஆடம்பரமான காரில் போவது வசதியான வாழ்க்கையல்ல. மருத்துவமனை போகாமல் வாழ்வது தான் வசதியான வாழ்க்கை. ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நாம் தேடிச்செல்லும் பொழுது தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை நம்மைத் தேடி வரும்.

கணவன் ஊதாரி ஆனால் பாதி வீடும் மனைவி ஊதாரி ஆனால் முழு வீடும் அழிந்து விடும். உள்ளம் கண்டு பழகு உருவம் கண்டு பழகாதே. பண்பு கண்டு பழகு பருவத்தைக் கண்டு பழகாதே.அகம் கண்டு பழகு.முகம் கண்டு பழகாதே. உன்னை ஒருவன் குறைத்துப் பேசும் போது அடக்கமாய் இரு அது உன் வீரம். உன்னை ஒருவன் புகழ்ந்து பேசும் போது எச்சரிக்கையாய் இரு.

You May Also Like

About the Author: IniyathuAdmin