ஆண்டாள் சங்கிடம் கேட்ட சந்தேகம்

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மகா விஷ்ணுவின் உதட்டில் முத்தமிடவேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.எப்படி முத்தமிட வேண்டும்? அவர்க்கும் ஒரு அனுபவம் வேண்டுமல்லவா? ஏற்கனவே மணந்த மகா லட்சுமியை கேட்கலாம். அது பிரச்சனையாகி விடும்.
வேறு யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது.அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!

அதை வைத்துதானே எப்போதும் வாயில்வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவைதெரிந்திருக்குமே!
இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.

கற்பூரம் நாறுமோ,
கமலப்பூ நாறுமோ,**
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே* !

கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.

மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லித் தொலையேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!
இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?

பக்தியில் பல வகைகள் உண்டு. இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், தெண்டனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழைபொழிந்தவள்.ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்! மார்கழி மாதமானால் அதிகாலை பொங்கலுடன் உள்ளே நுழையும் திருபாவைதான் ஆண்டாள். இறைவனை மணப்பதற்காகப் பாவை நோன்பிருந்து அதிகாலை வேளையில் தினசரி ஒன்றாக ஆண்டாள் பாடியமுப்பது பாடல்கள் அவை.

என்ன இந்தப் பெண் இப்படி ஒரு அரங்கன் பித்து பிடித்து அலைகிறாளே என்று அவளது அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது.வில்லிபுத்தூர் இறைவனான வட பத்ரசாயிடம் போய்கதறி கண்ணீர் மல்க தன் மகளுக்கொரு வழி காட்டும்படிவேண்டினார்.
அவரால் வேறென்ன செய்ய முடியும்.
இறைவன் உத்தரவுப்படியே விஷ்ணு தன்மகளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துப் போனார்.

அரங்கன் ஆண்டாளை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

You May Also Like

About the Author: IniyathuAdmin