உன் வெற்றியை தடுப்பவர்

தோல்விகள் உனக்கு நேருகிறது என்றால் அது உன்னை வீழ்த்த அல்ல உன்னை உயரத்தில் சேர்க்க. வாழ்க்கையில் கிடைக்கும் கிடைக்காத அனைத்திற்க்கும் காரணம் உண்டு அவைகள் எல்லாம் உன் நல்லதிற்கே,

அவற்றுள் நீ அதை புரிந்துக்கொண்டால் உன் நம்பிக்கை பொறுமை உன்னை வெற்றிக்கு கூட்டிச் செல்லும். அவசரப்பட்டு நீ எடுக்கும் முடிவுகள் தான் உன்னை நிஜ தோல்விக்கு அழைத்துச் செல்லும்.

தோல்வி என்பது உனக்கு சறுக்கல் தான் என் பிள்ளையை நான் மேலே உயர்த்துவேன் வெற்றி பெறுவாய் இது என் சத்திய வாக்கு. அதற்கு உன்னுடைய சிறு பொறுப்பு இல்லாமல் இருக்கும் குணத்தை வெளியில் எடுத்து எறி.

உன் வெற்றியை தடுப்பவர் யாராகவும் இருக்க முடியாது அந்த வழியை பின்பற்றினால். நீ என்று என்னை அழைத்து உன்னிடத்தில் நான் என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ அன்றே நீ என் உயிரான பொறுப்பு.

உன் நம்பிக்கையையும் பொறுமையையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை நான் அறிவேன். உன் மேல் கோபம் கொள் மாட்டேன் அப்படி கோபம் இருந்தால் நிச்சயம் அது உன்னை மாற்றவே நல்ல வழியில் என்பதற்கே.

நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று சீரும் சிறப்புமாய் நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய.

You May Also Like

About the Author: IniyathuAdmin