இத்தனை நன்மைகளை இந்த இறகு தருமாம் !!

காவடிக்கு அழகு சேர்ப்பவை மயில் இறகுகள். இந்த மயில் இறகுகளை சிறு குழந்தைகள் தங்கள் புத்தகத்தினுள் குட்டி போடும் என்று வைத்திருப்பர். மயில் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை பலரும் புனிதமானதாக கருதி தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருகின்றனர்.

இந்த மயில் இறகு பல தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது. என்னென்ன தோஷங்களை நீக்கும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பணம் மற்றும் நகை வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, அது நிலைத்து நிற்கும்.

வீட்டில் யாராவது வந்து போனால் சிலவேளைகளில் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

சனி தோஷம் நீங்க வேண்டுமானால் மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, புரிந்து கொள்ளுதல் அதிகரிக்கும்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி வர வேண்டும். இப்படி சொல்லி வர வாஸ்து தோஷம் நீங்கும்.

மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதை தடுக்கலாம்.

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் மேம்படும்.

.

You May Also Like

About the Author: IniyathuAdmin