ஏன் இருக்கைகள் விமானத்தில் நீல நிறமாக இருக்கின்றன?

விமானங்களில் பயணம் செய்த அனைவரும் நிச்சயமாக கவனித்திருப்பீர்கள் விமானத்தின் இருக்கைகள் நீல நிறத்தில் இருப்பதை. இதற்கு ஏன் இந்த நிறத்தை கொடுத்திருகின்றனர் என்று என்றைக்காவது நினைத்து பார்த்திருகிறீர்களா?

விமானங்களில் முதல் முறையாக பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த சந்தோஷம் இருக்கும். அப்படி அவர்களுக்கு சந்தோஷம் இருந்தாலும் அடிமனதில் மிகுந்த பயம் நிச்சயமாக இருக்கும்.

எதெற்கென்றால் கீழே விழுந்து விடுவோமோ, அருகில் இருப்பவர் எப்படிப்பட்டவரோ என பல கவலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் பயத்தை போக்குவதற்காக விமானங்களில் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏன்னென்றால் நீல நிறமானது நம்பிக்கை, செயல்திறன், அமைதி, குளிர்ச்சி, பிரதிபலிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக மனதில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதாக கூறப்படுகிறது. விமானங்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற உணர்வுகள் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை.

மேலும் நீல நிறத்தினை கண்டால் நம் மனம் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும் என்றும் உளவியல் வல்லுநர்கள் ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவேதான் விமான நிறுவனங்கள் நீல நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த நீல நிற இருக்கைகளுக்கு பின்னால் இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஏரோபோபியாவை எதிர்த்து போரிட இது பயணிகளுக்கு உதவி புரியும்.

பயணிகளின் மனநிலை விமானத்தில் பயணிக்கும் போது ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். இது இதய துடிப்பை அதிகரித்து உடலினுள் பதட்டமான சூழ்நிலையை உண்டாக்கும். ஆனால் நம் மூளையை சரிசெய்வதன் மூலம் இது போன்ற பதட்டமான சூழ்நிலையில் இருந்து விடுபடலாம்.

நம் கண்கள் தான் மூளைக்கு பெரும்பாலும் சுற்று சூழலில் இருக்கும் காட்சிகளை உணர்த்தி நம் உடல் நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிவிக்கின்றது. இதை நிவிர்த்தி செய்ய பொறியாளர்கள் பயணிப்பவர்களின் மனோநிலையை சரி செய்ய விமானத்தினுள் நீல நிறத்தினை பளிச்சென்று தெரியும் அளவிற்கு வைத்துள்ளனர்.

விமானத்தில் பயணிகளுக்கு இடையே சண்டை, சச்சரவுகள் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதை தடுப்பதற்காகவும் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.

விமான பயணங்கள் ஒரு சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடியவை என்பதையும் மறுத்து விட முடியாது. ஒரு சில சமயங்களில் உங்களுக்கு விமானத்தில் மிகவும் மோசமான அனுபவங்கள் உண்டாகலாம். பலரும் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியதாகவும் இருக்கலாம்.

எனவே இந்த நேரங்களில் இருக்கைகளின் நிறத்தின் உதவியுடன் முடிந்தவரை அனைத்து பயணிகளையும் அமைதியாக வைத்திருக்க விமான நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. இப்போது கண்டிப்பாக உங்களுக்கு தோன்றும்.

அதற்கும், நீல நிறத்திற்கும் என்ன தொடர்பு என்று. இதற்கு அறிவியல் ரீதியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது என்ன என்று பார்ப்போம். ஒருவரை அமைதிப்படுத்தக்கூடிய ரசாயனங்களை நீல நிறம் உடலில் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டு கொள்வதற்கான வாய்ப்புகள் குறையும்.

அதன் கூடவே நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும். நீல நிறம் அமைதியை குறிக்கிறது என நிறம் சம்பந்தப்பட்ட சைக்காலஜி வல்லுனர்கள் கூறுகின்றனர். எல்லா நேரங்களிலும் விமான நிறுவனங்கள் நீல நிறத்தைதான் தேர்வு செய்துள்ளனவா என்ற கேள்வி எழுப்பினால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் விமான நிறுவனங்கள் செலவை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் நீல நிறத்தை உபயோகப்படுத்துகின்றன. வெள்ளை நிறங்களுடன் ஒப்பிடும்போது, நீல நிற இருக்கைகளில் அழுக்கு மற்றும் உணவு கறைகள் அவ்வளவாக தெரியாது.

எனவே அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் அடிக்கடி மாற்றுவது போன்ற தேவைகள் அதிகமாக இருக்காது என்பதால், ஓரளவிற்கு பணத்தை விமான நிறுவனங்களால் சேமிக்க முடியும். இதன் காரணமாகவும் நீல நிற இருக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

You May Also Like

About the Author: IniyathuAdmin