சனி பகவான் கெடுதலை தருவதற்கு இந்த பெண்தான் காரணம் தெரியுமா ?

நவகிரகங்களில் முக்கியமானவாராக கருதப்படுபவர் சனி பகவான். இவர் “ஆயுள்காரகர்’ எனப்படுகிறார். இவர் செய்ய கூடிய செயல் என்னவென்றால் மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பிரதிபலன் அளிக்கிறார். நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு சக்திவாய்ந்தவர்.

இவரை ஆகமங்களில் கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன், இருகரம் உடையவன். வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன் என்று கூறப்படுகிறது.

நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான், நீல மேனி உடையவன், முடிதரித்தவன், சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், அழகு வாகனம் உடையவன், கருஞ்சந்தனம் பூசுபவன், மேற்கு நோக்கி இருப்பான் மற்றும் மெல்ல நடப்பவன், கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சனி பகவான் மக்களுக்கு கெடுதலை தர கூடியவர் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். இவர் ஏன் கெடுதலை தருகிறார் என்று தெரியுமா? இதற்கு ஒரு பெரிய கதையே இருக்கிறது. சனி பகவானுக்கு இல்லறத்தில் நாட்டம் கிடையாது தவம் செய்வதில் மட்டும் தான் ஈடுபாடு. இது தெரியாமல் சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.

சனிபகவான் கல்யாணமான பிறகும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார். இதை பார்த்த அந்த பெண் எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த அந்த கணவனாகிய சனிபகவானை எண்ணி மிகுந்த வேதனை அடைந்தாள். இதனால் அவள் அவனை சபித்து விட்டாள்.

கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், ஒரு பெண்ணின் ஆசையை கூட புரிந்து கொள்ளாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடைய கூடாது என்று சபித்தாள். இந்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை மிக கொடுமையாக மாறியது. அதை மாற்றவே முடியவில்லை என்பது அவர்களின் நம்பிக்கை.

You May Also Like

About the Author: IniyathuAdmin