தமிழகத்தில் சாதித்து காட்டிய 7 பெண்மணிகள்

இந்த உலகில் சாதிக்க முடியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சாதித்தவர்கள் அத்தனை பேரும் பல தோல்விகளை அடைத்து அதன் பின்னர் தான் வெற்றியை பெற்றுள்ளனர். அதிலும் பெண்கள் மிகப்பெரிய சாதனைகளை செய்து பலரையும் மலைக்கவைத்துள்ளனர். ஆண்களுக்கே அதிகம் உரிமைகளை தரும் சமூகத்தில் பெண்கள் சாதிப்பது லேசான காரியம் அல்ல. கடுமையான உழைப்பும் புத்திசாலித்தனமும் மட்டுமே காரணம். அப்படி சாதித்து காட்டிய சில பெண்மணிகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்ரீதேவி

கலைத்துறையைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, சிவகாசியைச் சேர்ந்தவர். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.

முதலில் தமிழ் படங்களில் தனது பயணத்தை தொடங்கி, பின் தனது வளர்ச்சியால் பல மொழிகளில் நடித்து, இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். இவர் 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் மம். கலைத்துறையில் அவர் செய்த சாதனைகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

நானம்மாள்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நானம்மாள். இந்தியாவின் மூத்த யோகா பயிற்சியாளராக கருதப்படும் இவர் 98 வயதை தாண்டிய பாட்டி. இப்போதும் கடினமான யோகாவை சர்வசாதாரணமாக செய்து அசத்தி வருகிறார். தள்ளாடும் வயதிலும், கை கால்களை வளைத்து யோகாசனம் செய்யும் இவருக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தி உள்ளது.

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கலாச்சாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். நாட்டுப்புற கலைகளுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக மத்திய அரசு இவருக்கு பதமஸ்ரீ விருதளித்து கௌரவப்படுத்தியுள்ளது.

குயிலி

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி, குயிலி. பிறந்த மண்ணையும், வீர மங்கை வேலுநாச்சியாரையும் தன் உயிராக சபதம் கொண்டபோது குயிலிக்கு வயது 18.

பெண் விடுதலை போராளியான குயிலி, வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராகவும் அவரது பெண்கள் படையின் படைத்தளபதியாகவும் பணியாற்றினார். உலகிலேயே முதன்முதலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய பெருமையைச் பெற்றவள் தான் குயிலி.

ரூபா தேவி

கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்த தமிழக பெண்மணி ரூபா தேவி. தமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, பல்வேறு தடைகளை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சங்கமான ஃபிஃபாவால் (FIFA) சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியமர்த்தப்பட்டார்.

இதன் மூலம், தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா கால்பந்து நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்றார். பிஎஸ்சி மற்றும் பி.எட். கல்வியை பூர்த்தி செய்துள்ள ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘சக்தி விருது’ , ரெயின் டிராப்ஸ் நிறுவன விருது உள்பட பல விருதுகளை, தனது விளையாட்டு சாதனைகளுக்காக பெற்றுள்ளார்.

இந்திரா நூயி

குளிர்பானத் துறையில் உலக அளவில் சாதனைப் படைத்து வரும் பெண்மணி இந்திரா நூயி. பெப்சி நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருக்கும் இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி. போர்பஸ் பத்திரிக்கை 2008 ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 3 ஆவது பெண் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டிருந்தது.

சென்னையில் பிறந்த இவர், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்றவர். பல கோடி கணக்கில் வர்த்தகம் செய்யும் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, தனது ஆளுமை திறமையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். கலைத்துறையைச் சேர்ந்த இவர், தனது நடிப்புத் திறமையாலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழகத்தில் 6 முறை முதல்வர் பதவி வகித்த ஒரே தலைவரும் இவர்தான்.

You May Also Like

About the Author: IniyathuAdmin