பனங்கற்கண்டின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பனங்கற்கண்டு நாம் அனைவருமே பயன்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களுள் ஓன்று. இது கரும்பு மற்றும் பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைப்பர். இந்த பனங்கற்கண்டு இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் இனிப்பு சுவை குறைந்த அளவே இருப்பதால் இது நம் உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

இந்த பனங்கற்கண்டானது பனை மரத்தின் பதநீரை தூய்மைப்படுத்தி அதனை காய்ச்சி பாகு பதத்தில் வடித்து கற்கண்டு வடிவில் தயாரிக்கும்போது கிடைப்பதே பனங்கற்கண்டு. பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால், இது ஆஸ்துமா, சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

இதில் நோய் எதிர்ப்புத் திறனுக்கு காரணமான ஆன்டி ஆக்சிடென்ட்டும் அதிகம் இருக்கின்றன. பங்கற்கண்டு சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றலைத் தரக்கூடியது. மேலும் இதை பயன்படுத்துவதால் என்னென்ன பலன்கள் என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.

சளி, இருமல் குணமாக

பனங்கற்கண்டு 25 கிராம் எடுத்து அதனுடன் தூதுவளை 5 இலை, மிளகு 10 இவற்றையும் சேர்த்து நீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். மிளகு இடித்து போட வேண்டும். நீர் நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி ஆறவிட்டு மிதமான சூட்டில் பருகி வர சளி, இருமல், ஒற்றை தலைவலி குணமாகும். இதனை சைனஸ் பிரச்சனை உடையவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் பருக வேண்டும்.

தொண்டைக்கட்டு

ஜலதோஷம் வந்தால் தொண்டைக்கட்டு ஏற்படும். இதனால் அவர்களுக்கு சரிவர பேச முடியாமலும், சாப்பிட முடியாமலும் அவதிப்படுவார்க்ள. இப்பிரச்சனையை போக்க 1/2 ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டால் தொண்டைவலி மற்றும் தொண்டைக்கட்டு விரைவில் குணமாகும்.

மலச்சிக்கலை தடுக்க

பனங்கற்கண்டு 10 கிராம், வாழைப்பழம் 1, உலர் திராட்சை 5 ஆகிய மூன்றையும் மிக்சியில் அடித்து, இரவில் படுக்கும் முன் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. ஏனெனில் பனங்கற்கண்டில் தேவையான அளவு நார்சத்து இருப்பதால் குடலின் நொதிகள் சீராக செயல்பட்டு, செரிமான சக்தியும் தூண்டப்பட்டு, குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

இதய செயல்பாட்டிற்கு

பனங்கற்கண்டு இரத்தத்தை சுத்தம் செய்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. இதயக் கோளாறுகள் மற்றும் இரத்த அழுத்தம் சீராக, பனங்கற்கண்டில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதயத் தசைகளை பாதுகாக்க பனங்கற்கண்டு வல்லது. மேலும் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருகிறது. நினைவாற்றலையும் பெருக்குகிறது.

இரத்தசோகை குணமாக

இரத்த சோகை குணமாக பனங்கற்கண்டு 250 கிராம், மாதுளம் பழசாறு 250 மில்லி, ரோஜா பன்னீர் 25 மில்லி மூன்றையும் சேர்த்து காய்ச்சி, பாகு பதத்தில் இறக்கி, ஆறிய பின் ஒரு கண்ணாடிக் பாட்டிலில் சேகரித்து வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர, ஒரு மாதத்திற்குள் இரத்த அணுக்கள் உற்பத்தியாகி, ஹீமோகுளோபின் எண்ணிக்கை கூடும். பனங்கற்கண்டில் இரும்புசத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகை குறைபாட்டை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கருவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க

கருத்தரிக்கும் பெண்களுக்கு கருவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கவும், சுகப்பிரசவம் உண்டாகவும் கர்ப்பிணிகள் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பியும் அதிகரிக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்க

சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு காய்ச்சி ஆறிய பின், தினமும் இரவு படுப்பதற்கு முன் குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பாதாம் பருப்பை பொடித்து போட வேண்டும். மேலும் கண்பார்வை கூர்மையாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை, பாதாம் மற்றும் மிளகுதூளுடன் சேர்த்து வாரத்தில் 3 முறை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலை எந்த நோயும் அண்டாது.

சோர்வாக இருந்தால்

சோர்வாக இருந்தால் அதற்கு 1/2 ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிதளவு நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும், மிகவும் சுறுசுறுப்பாக மாறி விடலாம்.

சிறுநீரக கற்கள் மறைய

கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இதை சரிசெய்ய ஒரு மேஜை கரண்டி பனங்கற்கண்டு மற்றும் இரண்டு மேஜை கரண்டி வெங்காய ஜூஸ் இரண்டும் சேர்த்து வாரத்திற்கு 2 நாள் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

வாய் துர்நாற்றம்

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு நன்கு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை போக்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டு வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

உடல் வெப்பம் தணிய

கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த வெப்பத்தைத் தணிக்க பனங்கற்கண்டுகளை அதிகம் சாப்பிடுவதாலும் பானங்களில் கலந்து பருகுவதாலும் உடல் வெப்பம் மற்றும் உஷ்ணத்தை நீக்க முடியும்.

மாதவிடாய் பிரச்சனை

பெண்கள் அவதிப்படும் பிரச்சனைகளில் ஓன்று மாதவிடாய் சுழற்சி கோளாறு. மாதவிடாய் பிரச்சனை உள்ள இளம்பெண்களுக்கு பனங்கற்கண்டு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. எள்ளு கசாயத்தில், திரிகடுகு மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து பருகி வந்தால் மாதவிடாய் சரியாகும்.

வெள்ளை நிற சர்க்கரை பல தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆகையால் அனைவருமே பனங்கற்கண்டை பயன்படுத்தி உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

You May Also Like

About the Author: IniyathuAdmin