பழங்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா ?

கண்ட கனவுகளின் பலனை தெரிந்து கொள்வதற்கு அனைவருக்கும் ஆசையாக இருக்கும். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் மற்றும் பலன்கள் உண்டு அப்படி பழங்களை உங்கள் கனவில் கண்டால் என்னென்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

பழங்களை கனவில் கண்டால் லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வருவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

திராட்சைப்பழம்

திராட்சைப்பழம் கனவில் வந்தால் உங்கள் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அர்த்தம். மேலும் திராட்சை கனவில் வருவது உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும்.

கனிந்த பழங்கள்

நன்கு கனிந்த பழங்களை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் ஏதாவது சிறப்பான சந்தர்ப்பம் உங்களைத் தேடி வரும் என்று அர்த்தம். நல்ல விஷயங்கள் நடக்கலாம்.

கிவி பழம்

கிவி பழம் உங்கள் கனவில் வந்தால் சிறிது மனச்சோர்வுடன் இருக்கிறீர்கள். புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று அர்த்தம். அது உங்களுக்கு மனவலிமையைத் தரும் மாறமாகவும் அமையும்.

ஈக்கள் மொய்க்கும் பழங்கள்

ஈக்கள் மொய்க்கும் பழங்கள் உங்கள் கனவில் வந்தால் எரிச்சலூட்டும் சம்பவங்கள் உங்களுக்கு நடக்கலாம். சில நேரங்களில் செய்யும் வேலைகளில் மோசமான முடிவுகளை தரலாம், நீங்கள் செய்யும் வேலைக்கு இன்னொருவருக்கு பலன் கிடைக்கும்.

பலாப்பழம்

பலாப்பழம் வளமை, ஆண்மை ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது. பலாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

மற்றவர்களுக்கு பழம் கொடுப்பது

பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால் சந்தோஷத்தை பங்கு போட யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள். கொஞ்சம் கவனமாக செயலில் இறங்குங்கள்

ஸ்டார் ஃபுரூட்

ஸ்டார் ஃபுரூட் வருவது போல் கனவு கண்டால் நீங்கள் சரியான பாதையை நோக்கிப் போகிறீர்கள். வெற்றிக்கனியை சுவைக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

சீதாப்பழம்

சீதாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையும் மனமும் அமைதியால் நிரம்பலாம் . ஆன்மிக எண்ணங்கள் அதிகம் தோன்றும் என்று அர்த்தம்

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் ஏதாவது எதிர்பாராத பொருளிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் பழி ஏற்படக்கூடும். கவனமாக இருக்க வேண்டும்.

காய்களை நறுக்குவது

காய்களை நறுக்குவது போல் கனவு கண்டால், மனதில் இருந்த சங்கடங்களும், பிரச்சனைகளும் விலகும். பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

நாவல் பழம்

நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம் உண்டாகும்.

நாவல் பழம் பறிப்பது

நாவல் பழத்தை நீங்கள் பறிப்பது போல கனவு கண்டால் நீங்கள் உங்கள் மனதில் நினைத்த காரியம் சில தடைகளுக்கு பிறகு நடக்கும் என அர்த்தம்

கொய்யா பழம் பறிப்பது

கொய்யா பழங்களை நீங்கள் மரத்தில் தேடி சென்று பறிப்பது போல கனவு கண்டால் உங்கள் மனதிற்கு விரும்பிய செயலானது விரைவில் நடக்கும் என அர்த்தம்

கொய்யா பழங்களை சாப்பிடுவது

கொய்யா பழங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் உங்கள் நோய்கள் விலகும் என அர்த்தம். செய்யும் தொழிலில் நல்ல உயர்வு கிட்டும்.

பழங்கள் நிறைந்து காணப்படும் செடி

பழங்கள் நிறைந்து காணப்படும் செடியை உங்கள் கனவில் கண்டால் சொத்து சேர்க்கையும் புத்திர சம்பத்தும் உண்டாகும்

பழங்கள் நிறைந்த மரங்கள்

பழங்கள் நிறைந்த மரங்களை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் மிகசிறந்த பலன்கள் கிடைக்கும்.

பழங்களை கொடுப்பதாக கண்டால்

பழங்களை ஒருவர் உங்களுக்கு கொடுப்பதாகவோ நீங்கள் உண்பதாகவோ கனவு கண்டால் நீங்கள் செய்யும் காரியம் வெற்றியாக முடியும்.

நிறைய பழங்கள் இருக்கும் மரத்தில் பறிப்பது

பழங்கள் அதிகம் பழுத்து நிறைந்திருக்கும் மரத்தில் நீங்கள் ஏறி பழங்களை பறிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு சொத்து சேர்க்கை அதிகமாக உண்டாகும்.

மாதுளம் பழம் சாப்பிடுவது

நீங்கள் மாதுளை பழத்தை உண்பது போல கனவு கண்டால் கெட்ட நிகழ்வுகள் ஏற்படும் என அர்த்தம்

கர்ப்பிணி பெண்கள் பழங்கள் கனவு கண்டால் என்ன நடக்கும்:
மாம்பழம்

கர்ப்பிணி பெண்கள் மாம்பழத்தை உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.

வாழைப்பழம்

கர்ப்பிணி பெண்கள் உங்கள் கனவில் வாழைப்பழம் வருவது போல கனவு கண்டால் உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கலாம்.

You May Also Like

About the Author: IniyathuAdmin