பெண்கள் அன்று ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா?

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப் பொருட்களில் ஊஞ்சலும் ஓன்று. இதை தெய்வீக ஆசனம் என்றும் கூறுவார். முன்னைய காலத்தில் ஊருக்கு வெளியே மரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஊஞ்சல் ஆடினார்கள்.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரயோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருந்தது. குறிப்பாக இந்த ஊஞ்சல் ஆட்டமானது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடியது.

பின்பு அது படிப்படியாய் குறைந்து இப்பொழுது ஊஞ்சல் காணாமல் போய்விட்டது. அப்பேற்பட்ட இந்த ஊஞ்சலை ஆடுவதால், என்னென்ன நன்மைகள் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

* வீட்டில் இருக்கும் உபகரணங்களிலேயே பெண்களுக்கு மகிழ்ச்சியை தருவது ஊஞ்சல்தான்.

வதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

* சாப்பிட்டவுடன் 1/2 மணி நேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

* கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் எளிதில் கோபம் தணிந்து விடும்.

* வீட்டு தோட்டத்தில் அமைத்திருக்கும் ஊஞ்சலில் வேகமாக ஆடுவது அதிக பலனை தரக்கூடியது.

* தோட்டத்து ஊஞ்சலில் ஆடும் போது மரம், செடிகளிலிருந்து வரும் “பிராணவாயு” வேகமாக உடல் முழுவதும் பரவி இரத்தத்தை சுத்திகரிக்கும்.

* இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். எனவே தோட்டத்து ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதய நோய் கட்டுப்படும்.

* ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே சுபகாரியங்கள் பற்றி பேசும்போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவது வழக்கமாக இருந்தது.

* மணிக்கணக்கில் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துபோன இன்றைய பெண்கள் தினமும் ஊஞ்சல் ஆடினால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி வகுக்கும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். அதேபோல் நாமும் நமது வீட்டில் ஊஞ்சல் கட்டி, அந்த ஊஞ்சலிலே ஆடி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

You May Also Like

About the Author: IniyathuAdmin