உங்களுடைய கனவில் பணம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா ?

பணம் பற்றிய கனவுகள் பலருக்கும் வரும். மேலும் இது நாம் அதிக அளவில் பணத்தை கையாள்வதால் இப்படி ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது.

பணம் கொடுக்கல் வாங்கலில் நாம் அதிகம் ஈடுபடுவதால் அது நம்முடைய மனதில் நிற்கும். அப்படி நம்முடைய ஆழ்மனதில் இருக்கும் பணம் பற்றிய சில கனவுகளின் பலன்களை பார்ப்போம்

உங்களுடைய கனவில் நீங்கள் பணம் எண்ணுவது போல் கனவு வந்தால் விரைவில் உங்களுக்கு பண நெருக்கடி உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
ஆகையால் நீங்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுடைய கனவில் பணத்தை நீங்கள் ஒருவரிடமிருந்து பெறுவதாக கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு தனலாபம் வந்துசேரும்.

உங்களிடமிருந்து பணம் திருடு போவதாக நீங்கள் கனவு கண்டால் உங்கள் கையிருப்பு கரையும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்தால் பணமும் திரும்ப வராது. உங்களுடைய நட்பும் முறியும்.

உங்களுடைய கனவில் பணம் கிடைக்கிறது. ஆனால் எங்கிருந்து கிடைக்கிறது என தெரியாமல் இருந்தால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

அதுவும் புதிதாக யாருக்கும் ஜாமீன் சாட்சி கையெழுத்து போன்றவற்றை போடும் முன் நன்கு சிந்தித்து போட வேண்டும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin