கெட்ட கனவு வராமல் தடுக்க இந்த தண்ணீரில் குளித்து, இந்த கயிறு கட்டி, இந்த இறைவனை வழிபட்டாலே போதும்?

கெட்ட கனவு என்பது முதலில் எதனால் வருகிறது? நம் ஆழ்மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனையும், நீண்ட நாள் ஆசையும், நிறைவேறாத ஆசையுமே காரணமாக இருக்கின்றது. இவைத்தவிர கெட்ட சக்திகளின் தாக்கம் இருந்தாலும், கண் திருஷ்டியின் தாக்கம் இருந்தாலும் கெட்ட கனவுகள் வரும் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பல வகையான எதிர்மறை பிரச்சினைகள் எல்லாம் எதற்காக, நடுத்தர பட்ட, சாதாரண மனிதர்களையே தாக்குகின்றது? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. அதாவது பெரிய பெரிய பணக்காரர்கள், வசதிபடைத்தவர்கள் இவர்களுக்கெல்லாம் கண்திருஷ்டி படாதா? கெட்ட சக்திகள் அண்டவே அண்டாதா? ஆடம்பர வாழ்க்கையை வாழ்பவர்கள் எல்லாம் நன்றாக தானே வாழ்கிறார்கள். என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு.

எவரொருவர் அந்தஸ்தில் உயர்ந்தவராக இருக்கின்றாரோ, புகழின் உச்சியில் இருக்கின்றாரோ, அவர் கட்டாயம் தனக்கு என்ன பாதுகாப்பு தேவையோ அதை சரியான முறையில் செய்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. சரியான முறையில் பூஜை புனஸ்காரங்கள், கெட்ட சக்தியும், கண் திருஷ்டியும் அண்டாமல் இருக்க, பரிகாரங்கள், இப்படி தனக்கான பாதுகாப்பு வளையத்தை அவர்களை செய்துகொள்கிறார்கள் என்பதை நாம் அறியவில்லை. தங்களின் பாதுகாப்பிற்காக செய்யப்படும் பரிகாரங்களை பணம் படைத்தவர்கள் என்றைக்குமே வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எது எப்படியாக இருந்தாலும் நமக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்றால் அதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. நேரம் நன்றாக இருக்கும்போது கெட்டது கூட, நல்லவையாக மாறிவிடும். அதுவே நேரம் சற்று கீழ் நோக்கி சென்றால், நடக்கும் நல்லது கூட கெட்டதில் போய் முடியும். இப்படிப்பட்ட பலவிதமான பிரச்சினைகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள சுலபமான பரிகாரங்களை, பாதிப்பு ஏற்படாத பரிகாரங்களை, நம்பிக்கையோடு செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. அந்தப் பரிகாரங்கள் என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லுப்பு, மஞ்சள் பொடி இவைகள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து, நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் போட்டு கரைத்து குளித்தால், உங்களுக்கு எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு கெட்ட சக்தி உங்களது உடம்பில் ஊடுருவி இருந்தாலும் சரி, அது நிச்சயமாக உங்களது உடலிலிருந்து நீங்கிவிடும். முடிந்தால் தினம்தோறும் இப்படிக் குளிக்கலாம். முடியாதவர்கள் வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ இந்த பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கருப்பு கயிறுக்கும், சிகப்பு கயிறுக்கும் கெட்ட சக்தியை நம்மிடம் அண்ட விடாமல் பாதுகாக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. இதனால் நீங்கள் பைரவர் கோவிலுக்கோ அல்லது அனுமன் கோவிலுக்கோ சென்று சிகப்பு அல்லது கருப்பு இந்த இரண்டில் ஏதாவது ஒரு கயிறை வாங்கி அர்ச்சகரிடம் கொடுத்து, சுவாமியின் கால் பாதத்தில் வைத்து பூஜை செய்து தரச் சொல்லுங்கள். அந்த கயிற்றை உங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வைரவரை நினைத்தோ அல்லது ஹனுமனை நினைத்தோ அந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளைப் போட்டு உங்களது கையில் கட்டிக் கொண்டாலே போதும்.

எந்த விதமான கெட்ட சக்தியும் உங்களை நெருங்காது. மனதில் அதிக அளவிலான பயம் உடையவர்கள் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் பைரவரையும், அனுமனையும் வழிபட கோவிலுக்கு செல்லலாம். உங்களை அறியாமலேயே உங்கள் மனதில் ஒரு தைரியம் வருவதை நிச்சயமாக அனுபவப்பூர்வமாக உணர முடியும். தினம்தோறும் பெருமாளை மனதில் நினைத்து அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்திய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ச நாராயணா! கிருஷ்ணா! எந்த கெட்ட சக்தியும் என்னை அண்டக் கூடாது.

எங்களது குடும்பத்தை பாதுகாக்க நீயே துணை. என்று கூறி வணங்க வேண்டும். இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்து பார்ப்பதில் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடைக்கப்போவதில்லை. பரிகாரத்தை செய்து விட்டோம், பிரச்சனைகள் ஏதும் வராது என்ற நேர்மறையான ஆற்றல் ஒன்றே போதும் நம்முடைய பிரச்சினை தீர!

You May Also Like

About the Author: IniyathuAdmin