அவரவர்_பார்வையில்… அவரவர்_கோணங்கள்.!

ஒரு பக்தன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான். அவன் தவத்தை மெச்சி கடவுள் அவனுக்கு தரிசனமாகி ‘என்ன வரம் வேண்டும் பக்தா?’ என்றார்.

கடவுளின் தரிசனம் கண்ட பக்தன் அவரை வணங்கி நின்று “இறைவா எனக்கு மற்றவர்களின் மனதை படிக்கிற திறமை அருள வேண்டும் சுவாமி’…என்றான்.

கடவுளும் அவன் கேட்டபடி ‘வரம் தந்தேன்’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பியபடி மீண்டும் கடவுளை அழைத்தான். கடவுளும் தரிசனமானார், அவன் அழுதபடியே ….அவரிடம் “இறைவா தயவு செய்து எனக்கு கொடுத்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.

‘ஏன்?’ என்றார் கடவுள். ‘இறைவா…அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் அதனால் எனக்கு தாங்க முடியவில்லை’….என்றான்.

‘அப்படியா, சரி….இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடி படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று மட்டும் கவனி’ என்றார் கடவுள்.

அவர் சொன்னபடி…..அப்படியே செய்தான் அந்த பக்தன். அப்போது ஒரு “குடிகாரன்_வந்தான்.” ‘யார்ரா இவன் நினைவே இல்லாம குடிச்சிட்டு படுத்திருக்கான் “குடிகாரப்_பயல்” ‘என்று சொல்லி விட்டுப் போனான்.

பிறகு ஒரு”திருடன்_வந்தான்” ராத்திரி பூரா எங்கோ கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ “திருட்டுப்_பயல்”இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு “நோயாளி_வந்தான்” ‘பாவம் வயித்துவலி போல இப்படி சுருண்டு கிடக்கான்’ நம்மைப் போல் இவனும் “ஒரு_நோயாளி” என்று சொல்லி விட்டுப் போனான்.

ஒரு “துறவி_வந்தார்”, ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ “இத்துறவி”என்று சொல்லி விட்டுப் போனார்.

சிறிது நேரம் கழிந்தது….கடவுள் மீண்டும் பக்தனிடம் வந்தார்.

‘பார்த்தாயா பக்தா….உன்னைப் பற்றி அவரவர் அவரவர்கள் வாழும் வாழ்க்கை நிலையிலும், சிந்திக்கும் கோணங்களிலும் தான் மற்றவர்களை பார்த்து புரிந்து கொள்கிறார்கள் என்பதை நீ புரிந்துகொள். இனியாவது மற்றவர்கள் உன்னைப் பற்றி விமர்சிப்பதை பொருட்படுத்தாதே!

ஒவ்வொருத்தர் பார்வைக்கும்….ஒரு புரிதல் இருக்கும். நீ உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல் வெற்றி உனக்குத் தான்’ என்றார்….கடவுள்.

பக்தன் அப்போதுதான் தெளிவடைந்தான்.

எல்லாம் அவன் செயல்…

You May Also Like

About the Author: IniyathuAdmin