தீராத நோயையும் தீர்த்து வைக்க இந்த பொருட்களை தானமாக கொடுத்தாலே போதும்

நமக்கு ஒரு பிரச்சினை வருகிறது, கஷ்டம் வருகிறது என்றால் அதற்கு கட்டாயம் நாம் செய்த பாவங்கள் தான் காரணமாக இருக்க முடியும். நாம் செய்த பாவ புண்ணிய கணக்கிற்க்கு ஏற்றவாறு நம்முடைய ஆரோக்கியமும் இருக்கிறது. அதாவது பெரிய பணம் படைத்தவர்கள் கூட, ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அது நிச்சயமாக நிம்மதி அளிக்காது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற ஒரு பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

சிலருக்கு தலைவலி, காய்ச்சல் இப்படி சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து போவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது பொதுவாகவே எல்லோருக்கும் வரக்கூடியது தான். ஆனால் சிலருக்கு உண்டாகும் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் பின்தொடரும். அவர்களால் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் உயிர் வாழவே முடியாது என்ற சூழ்நிலை இருக்கும். தினம்தோறும் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகுவதுடன் சேர்த்து ஒரு சில கடவுள் வழிபாட்டையும் மேற்கொண்டு, சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நிச்சயமாக நல்ல பலன் அடையலாம்.

அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டையும், ஒரு தானத்தையும் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் தீராத உடல்நிலை பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோவிலுக்கோ அல்லது பைரவர் கோவிலுக்கோ சென்று நெய் தீபம் ஏற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதோடு சேர்த்து ஒரு வாழை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட வாழைப்பழம், வாழைப்பூ, வாழைக்காய், இவைகளை அதே மரத்தின் வாழை இலையில் வைத்து இதனுடன் துவரம் பருப்பு, தேங்காய், வெல்லம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஒரு மஞ்சள் துண்டு, இவற்றுடன் காணிக்கையாக உங்களால் எவ்வளவு பணம் முடியுமோ அந்த தொகை, அனைத்தையும் வைத்து செவ்வாய்க்கிழமை வரும் சுவாதி நட்சத்திரத்தன்று தானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

சுவாதி நட்சத்திரம் என்பது செவ்வாய்க்கிழமையில் வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. என்றைக்கு வருகின்றது என்பதை நாள்காட்டியில் பார்த்துதான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த தானத்தை முருகன் கோவிலிலோ அல்லது பைரவர் கோவிலில் வைத்து செய்யலாம். தீராத நோய் உள்ளவர்கள் மட்டும்தான் இந்த தானத்தை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், பணகஷ்டம் உள்ளவர்கள், திருமணமாகாதவர்கள் கூட இந்த தானத்தை செய்வது நல்லது.

இதோடு சேர்த்து முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள் தீர, சங்கட சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் தீராத, எப்படிப்பட்ட பிரச்சனையும் தீரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதப் பிறப்பில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, சில தெய்வங்களும் தேவர்களும் கூட, தங்களுடைய கஷ்டங்கள் தீர, விநாயகரை சங்கட சதுர்த்தி திதி அன்று வணங்கியதாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர், செவ்வாய், மிருகண்டு முனிவர் இவர்கள் விநாயகரை சதுர்த்தி திதி அன்று விரதமிருந்து வழிபட்டு அருளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: IniyathuAdmin