இட்லி, தோசைக்கு சுவையான தேங்காய் சட்னி செய்யும் முறை

இட்லி, தோசை மற்றும் பொங்கல் என அனைத்து டிபன் வகைகளுக்கும் சிறந்த தேர்வு என்றால் அது கண்டிப்பாக தேங்காய் சட்னி தான். அந்த அளவிற்கு அது காலை டிபனில் இடம் பிடித்து விட்டது. இதனை எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: 

துருவிய தேங்காய் – 1 கப்

பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

பச்சைமிளகாய் – 3

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

உளுந்தம்பருப்பு – சிறிதளவு

காய்ந்தமிளகாய் – 2

கருவேப்பிலை – சிறிதளவு

தேங்காய் சட்னி செய்முறை:

முதலில் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி அதனை நன்றாக அரைத்து வேறொரு கின்னத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு தாளித்தவற்றை நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான தேங்காய் சட்னி தயார். சமைக்க ஆகும்.

நேரம் – 5 நிமிடம்

சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

You May Also Like

About the Author: IniyathuAdmin