சர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி

பாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக செய்து  சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் குறையும். பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. கீரையை தினமும் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

INGREDIENTS

  • பாலக்கீரை – 2 கப்
  • முட்டை – 3
  • பெரிய வெங்காயம் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பச்சைமிளகாய் – 1
  • உப்பு – சிறிதளவு

INSTRUCTIONS

பாலக்கீரையை  நன்றாக அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய பாலக்கீரை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வதங்கி வெந்ததும் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை பச்சை வாசனை போய் வதங்கி இறக்கினால்  பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.

You May Also Like

About the Author: IniyathuAdmin